×

பழனியில் வழக்கறிஞர் வீட்டில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகைகள் கொள்ளை

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் பழனி மில்ரோட்டில் வசித்து வருபவர் அருளானந்தம் முத்துக்குமாரசாமி. இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த  200 ஆண்டுகள் பழமைவாய்ந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இவர் நேற்று அவரது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சென்னை சென்று விட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் வீடுதிரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் கேட் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோ மற்றும் லாக்கர்கள் உடைக்கப்பட்டு 70 சவரன் நகைகள், மரகதம், வைரம் பதிந்த புலி நகம் கொண்ட டாலர்கள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுப்போயிருப்பது தெரியவந்துள்ளது.  

அருளானந்தத்தின்  முன்னோர்கள் இராமநாதபுர மாவட்டம் களைப்போடு கிராமத்தில் உள்ள  ஜமீன் குடும்பத்தின் உறவினர்கள். திருடுபோன நகைகள் பெரும்பாலும் 200 ஆண்டு பழமையான நகைகள். இதனையடுத்து அருளானந்தம் கொடுத்த புகாரின் பேரில் வந்த காவல்த் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருடர்களின் கை ரேகையை கண்டு பிடிப்பதற்காகத் திண்டுக்கல்லிலிருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், மோப்ப நாய்கள் மூலம் திருடர்களை காவல்த் துறையினர் தேடி வருகின்றனர்.


Tags : robbery ,house ,lawyer ,Palani , Palani, lawyer, antique jewelery, robbery
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்