×

எட்டாக் கனியான தங்கம்!.. ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 160 ரூபாய் உயர்ந்து ரூ.30,560க்கு விற்பனை

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

இன்று (ஜனவரி 11) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,820 ஆக உள்ளது. நேற்றைய தினத்தில் இதன் விலை ரூ.3,800 ஆக இருந்தது. நேற்றைய விலையிலிருந்து இன்று 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 30,400 ரூபாயிலிருந்து இன்று 30,560 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.

தூய தங்கத்தின் விலை!

24 கேரட் தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, ரூ.4,010க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்தில் 3,990 ரூபாய்க்கு விற்பனையானது.8 கிராம் தூய தங்கத்தின் விலை 31,920 ரூபாயிலிருந்து இன்று 32,080 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

வெள்ளியின் விலை!

வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50.10 ரூபாயிலிருந்து 50.60 ரூபாயாக அதிகரித்துள்ளளது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளி 50,100 ரூபாயிலிருந்து 500 ரூபாய் உயர்ந்து ரூ.50,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Ettak , Sales, Silver, Price, Jewelry, Gold
× RELATED ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகும்...