×

ஆஸ்திரேலியாவில் 3 மாதங்களாக பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வலியுறுத்தி உலகம் முழுவதும் மாபெரும் பேரணி

கன்பரா:  ஆஸ்திரேலியாவில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வலியுறுத்தி உலகின் பல்வேறு நாடுகளில் சூழலியல் ஆர்வலர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள சிட்னி மாகாணத்தில் 1000க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி கவன ஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வளங்களை அழித்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று  வருகின்றன.

மேலும் பற்றி எரியும் காட்டுத் தீயை தடுக்க அந்நாட்டு பிரதமர் சரியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென்று குற்றம்சாட்டி, இலத்தீன், அமெரிக்க நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றது. இங்கு 3 மாதங்களுக்கு மேலாக  நீடிக்கும் காட்டுத் தீயில் சிக்கி நாட்டின் நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் பலத்த காற்றும், அதிக உஷ்ண நிலையும் காட்டுத் தீயின் வேகத்தை அதிகரித்துள்ளது. இந்த காட்டுத் தீயில் 2 துணை மின் நிலையங்களும், ஏராளமான மின் இணைப்புகளும் சேதமடைந்துள்ளன.

இதன்காரணமாக சிட்னி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து இந்த நிலைமையை சமாளிப்பதற்காக 3000 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த காட்டுத்  தீயில் 2 லட்சம் ஏக்கருக்கு மேலாக நிலப்பரப்புகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன. இதுவரை 26 பேர் உயிரிழந்த நிலையில் 2000க்கும் மேலான வீடுகள் மற்றும் அறிய வகை விலங்குகள் தீக்கிரையாகியுள்ளன.  இதனால் ஆஸ்திரேலிய நாட்டு தூதரங்கம் மும்பு திரண்ட,  சூழலியல் ஆர்வலர்கள் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலகத் தலைவர்கள் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


Tags : rally ,world ,Australia , Australia, wildfire, world, rally
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி