×

மாநகராட்சியின் ஊழல் குறித்து பேசிய விவகாரம் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு

சென்னை: சென்னை மாநகராட்சியில் 1000 கோடி ஊழல் நடந்திருப்பது தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 13ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சென்னை மாநகராட்சியில் ஆற்று மணலுக்கு பதிலாக எம்-சாண்ட் பயன்படுத்தி அதன் மூலம் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி கொள்ளையடிப்பவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்தை ஊழல் நாறும் நிர்வாகமாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாற்றியிருக்கிறார்.

அவர் விரும்பும் ஊழல்களுக்கு எல்லாம், உள்ளாட்சித்துறை அதிகாரிகளும் கைகட்டி கொண்டு கப்பம் வசூல் செய்யும் பணியை கச்சிதமாய் செய்து வருகிறார்கள். எனவே இந்த ஊழல் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி சார்பில் சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறாக பேசியியுள்ளார். எனவே ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Tags : Stalin ,corporation , Stalin's defamation case ,corruption,corporation
× RELATED நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில்...