×

ஜனநாயகத்தை காக்கும் போராட்டத்தில் சிறிய கருத்து வேறுபாடுக்கு இடம் கொடுக்கக் கூடாது: மம்தாவுக்கு யெச்சூரி அறிவுரை

புதுடெல்லி: ‘ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில், மாநில அளவிலான சிறிய கருத்து வேறுபாடுகள், போட்டிகளுக்கு இடம் அளிக்கக் கூடாது,’ என மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் 13ம் தேதி கூட்டப்படும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று தெரிவித்தார். புதனன்று நடந்த நாடு தழுவிய அளவிலான வர்த்தகர்களின் போராட்டத்தின்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரியை சேர்ந்த சிலர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக மம்தா கூறியிருந்தார்.
இந்நிலையில், மம்தாவின் இந்த கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ.வின் மோசமான தாக்குதல்களை எதிர்கொண்டு நாட்டின் மதசார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தேசபக்தரின் பணியாகும். நமது அரசியலமைப்பை பாதுகாக்கும் போராட்டத்தில் உள்ளுர், மாநில அளவில் நிலவும் கருத்து வேறுபாடுகள், போட்டிகளுக்கு இடம் கொடுக்க கூடாது. இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தை மேற்கு வங்க அரசு புறக்கணித்தது விசித்திரமாக உள்ளது,’ என்று கூறியுள்ளார்.

Tags : fight ,Yechury ,Mamta , Democracy, Mamata, Yechury
× RELATED பாஜவில் சேராவிட்டால் கைது செய்வோம்...