×

திருவையாறில் இன்று தியாகராஜர் 173-வது ஆராதனை விழா

திருவையாறு:  தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 173-வது ஆராதனை விழா இன்று (11ம்தேதி) மதியம் 2 மணிக்கு கண்ணன் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்குகிறது. 3 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார்.  ஆராதனை விழாவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகிறார். கலெக்டர் கோவிந்தராவ் பங்கேற்கிறார். சபா செயலாளர் ஸ்ரீ முஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறுகிறார். வரும் 15ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை இசைநிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 15ம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை நடக்கிறது.


Tags : Thiagarajar ,observance ceremony , Thiagarajar's, 173rd observance ceremony today
× RELATED மாநில செஸ் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை