×

சட்டம் ஒழுங்கை காப்பதில் தமிழகம் முதலிடம் : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பகல் 12.40 மணி விமானத்தில்  மதுரை புறப்பட்டுச்சென்றார். அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை எனக்கு பாதுகாப்பு அளித்திருந்தது. தற்போது மத்திய உள்துறை பாதுகாப்பு எனக்கு தேவையில்லை என்று கருதிய காரணத்தால் அது விலக்கப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதிலும் பல்வேறு நிர்வாகத் திறமையிலும் தமிழகம் முதல்நிலை முன்னிலை மாநிலமாக மத்திய அரசே பிரகடனப்படுத்தியுள்ளது. இதிலிருந்து முழுமையாக சட்டம் ஒழுங்கை பாதுகாப்பில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுப்பதில் நாங்கள் நிலையான உறுதிப்பாட்டை எடுப்பதில்லை என்றும், மாறிமாறிப் பேசுவதாகவும் கூறுவது சரியல்ல. தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு ஒரு சிறு இடர்பாடு கூட வராமல் அவர்களின் முழு நலனையும் தமிழக அரசு பாதுகாக்கும். அதைத்தான் சட்டமன்றத்தில் நாங்கள் உறுதியாக கூறினோம். இது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்ஐ வில்சன் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தியாகம் புரிந்துள்ள காவல்துறை நண்பருக்கு உரிய நிவாரணம் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படும். ஆங்கிலோ இந்தியன் பிரதிநிதிகளுக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் முறை ரத்து என மத்திய அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு தொடர்ந்து பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதுதன் அதிமுகவின் நிலைப்பாடு. இதை மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியுள்ளது. இதை மத்திய அமைச்சரும் மறுபரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்.


Tags : Interview Tamilnadu ,Tamilnadu ,O. Panneerselvam , Tamilnadu , first to protect law and order, O. Panneerselvam
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி