×

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி 50க்கும் மேற்பட்டோர் வழக்கு : தேர்தல் அதிகாரிகள் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.  வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த கடலூர் மாவட்டம் சத்தியவாடி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட செங்கல்வராயன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதேபோல், 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் அனைத்தும் நேற்று விசாரித்த நீதிபதி, மறுவாக்கு எண்ணிக்கை கோரி வேட்பாளர்கள் அளித்த மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஜனவரி 13ம் தேதி தேர்தல் அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.  நடவடிக்கை எடுக்காத தேர்தல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்று எச்சரித்தார்.

Tags : re-election ,elections ,EC , Over 50 people sued,re-election, rural local elections
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...