×

குப்பை தரம் பிரிக்கும்போது மெஷினில் கை சிக்கி தொழிலாளி படுகாயம்: இரண்டரை மணி நேரம் போராடி மீட்பு

திருவொற்றியூர்: குப்பையை தரம் பிரித்தபோது தொழிலாளியின் கை மெஷினில் சிக்கியது. இரண்டரை மணி நேரம் போராடி அவரை மீட்டனர்.  மாதவரம், பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (24). திருவொற்றியூர் குப்பை கிடங்கில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை, குப்பையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டபோது, இயந்திரத்தின் கன்வேயர் பெல்ட்டில் அவரது கை சிக்கியது. உடனடியாக இயந்திரம் நிறுத்தப்பட்டு, சக ஊழியர்கள் அவரது கையை மீட்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சதக்கத்துல்லா தலைமையிலான வீரர்கள், வெல்டிங், கட்டர் மெஷின்களை வைத்து, இயந்திரத்தின் பாகங்களை வெட்டி எடுத்து, இரண்டரை மணி நேரம் போராட்டத்திற்கு பின், இயந்திரத்தில் சிக்கிய தினேஷின் கையை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில்
பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Recovery , Garbage quality, machine, worker injury
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...