காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் தாக்கி 3 போர்ட்டர்கள் பலி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் ராணுவ சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.  காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் பல மணி நேரம் நீடித்தது. குல்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய மார்டர் ரக குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, ராணுவ சுமை தூக்கும் ெதாழிலாளர்கள் 5 பேர் அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 3 ராணுவ சுமை தூக்கும் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்த தொழிலாளர்களின் சடலங்களை மீட்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.Tags : Pak ,border ,Kashmir ,Army ,Army attacks ,ports , Kashmir border, Pakistani army, 3 porters killed
× RELATED காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத...