×

மேக்ஸ்வெல் சிக்சர் மழையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியை வென்றது. டாக்லேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் முதலில் பந்துவீசியது. ரெனகேட்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. ஷான் மார்ஷ் 63 ரன் (43 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), மார்கஸ் ஹாரிஸ் 42 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), வெப்ஸ்டர் 25 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து வென்றது. ஸ்டாய்னிஸ் 0, கார்ட்ரைட் 35, பென் டங்க் 14 ரன்னில் வெளியேறினர்.

நிக் லார்கின் 33 ரன், கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 83 ரன் (45 பந்து, 1 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேக்ஸ்வெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது (8 போட்டி, 7 வெற்றி, 1 தோல்வி, 14 புள்ளி). சிட்னி சிக்சர்ஸ் (12), பிரிஸ்பேன் ஹீட் (8) அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.



Tags : Melbourne Stars ,Maxwell Six ,Maxwell Six Rain , Melbourne Stars, Maxwell
× RELATED ஸ்டாய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி