×

ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் அரை இறுதியில் வோஸ்னியாக்கி

ஆக்லாந்து: நியூசிலாந்தில் நடைபெறும் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றார். கால் இறுதியில் ஜெர்மனியின் ஜூலியா கோயர்ஜசுடன் நேற்று மோதிய வோஸ்னியாக்கி 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், அமண்டா அனிசிமோவா, ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோரும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர். இரட்டையர் பிரிவு அரை இறுதியில் கரோலின் வோஸ்னியாக்கி - செரீனா வில்லியம்ஸ் ஜோடி 7-6 (11-9), 6-2 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் கர்ஸ்டன் பிலிப்கென்ஸ் - வான் உயிட்வாங்க் ஜோடியை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags : ASP Classic Tennis Half ,end ,Wozniacki , ASP Classic Tennis, Wozniacki
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...