×

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டி: 78 ரன்கள் வித்தியாசத்தில் வற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா

புனே: இலங்கை அணிக்கு எதிரான 3 வது டி20 போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றது. இந்திய அணி - இலங்கை அணி மோதும் 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் லசித் மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.


Tags : T20 match ,India ,Sri Lanka , Sri Lanka team, T20 match, India
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...