×

முத்தையாபுரம் அருகே உணவின்றி தவித்த முதியவருக்கு உதவி செய்த காவலர்கள்: சமூக வலைதளங்களில் பாராட்டு

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் முதியவர் ஒருவர் உடல் சோர்வுற்ற நிலையில் இருந்தார். அவர் பல நாட்கள் சாப்பிடாமல் வாடி வதங்கிய நிலையில் காணப்பட்டார். யாராவது உதவி செய்யமாட்டார்களா? என்று தவித்து வந்தார். ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பசியில் சாலையின் சென்டர் மீடியனில் அமர்ந்துவிட்டார். முத்தையாபுரம் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முத்தையாபுரம் தலைமை காவலர் தேவேந்திர பாண்டியன் மற்றும் முதன்மை காவலர் செல்வராஜ் கண்களில் முதியவர் தென்பட்டார்.

அவர் பசியால் வாடுவதை பார்த்து பரிதாபப்பட்ட இருவரும் தாங்கள் வந்த இருச்சக்கர வாகனத்தில் அமரவைத்து அருகில் உள்ள ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்தனர். இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் பெயருக்குதான் என்றில்லாமல் ஒரு நண்பனை போல பசியால் வாடிய முதியவருக்கு உதவி செய்த காவலர்கள் இருவரையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மாதவனையும் பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags : Guards ,Muttiyapuram , Muttiyapuram, the old man who was without food, help, guards
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா