×

ஆஸ்திரேலியாவில் மேலும் காட்டுத்தீ பரவும் அபாயம்: இதுவரை 60 லட்சம் ஹெக்டேர் நாசம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் காட்டுத் தீ பரவும் அபாயம் இருப்பதாக மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள  நியூ சவுத்வேல்ஸ், விக்டோரியா ஆகிய மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, தேசிய  காட்டுத் தீ மீட்பு குழு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு, முதல்  கட்டமாக 9,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காட்டுத் தீயினால் இதுவரை 60 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி  தீயில்  கருகியுள்ளது. 1,500க்கும் மேற்பட்ட  வீடுகள் முற்றிலும் தீக்கிரையாகின. பல்லாயிரக்கணக்கான கோலா, கங்காரு உள்ளிட்ட விலங்குகள் கருகியும், காயமடைந்தும் உள்ளன. பல அரியவகை மரங்கள், செடிகளும் அழிவின் விளிம்பிற்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தற்போதும் விக்டோரியா மாகாணத்தில் 23 இடங்களில் காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதனால்  ஏற்படும் வெப்பக் காற்றினால், அடுத்த 48 மணி நேரத்தில் மீண்டும் பல்வேறு புதிய இடங்களில் காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ளது.

Tags : Australia , Australia, fire
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...