×

தாராசுரம் கருப்பண்ண சுவாமி கோயில் குளத்தை சுற்றி காம்பவுன்ட் சுவர் எழுப்பப்படுமா?...பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பாபநாசம்: தாராசுரம் கருப்பண்ண சுவாமி கோயில் குளத்தை சுற்றி காம்பவுன்ட் சுவர் கட்டப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் சாலை திருப்பத்தில் கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் அருகில் உள்ள குளத்தின் கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இது தொடர்ந்தால் நாளடைவில் இந்த குளம் குப்பைகளால் தூர்க்கப்படும் அபாயம் உள்ளது. இந்த குளத்தில் கழிவுநீரும் கலக்கின்றது. எனவே இந்த குளத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்ப வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஒரு காலகட்டத்தில் இந்த குளத்தில் பொதுமக்கள் குளித்து வந்துள்ளனர். தற்போது யாரும் குளிப்பதில்லை. வருங்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. எனவே நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி வருகிறது. எனவே இந்த குளத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்பி கரையில் குப்பைகள் கொட்டாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : pond ,Darasuram Karpanna Swamy Temple ,Compound ,Tarasuram Karpanna Swamy Temple , Tarasuram, Karpanna Swamy Temple, Compound wall
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்