×

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் கோர்ட் அனுமதி

சென்னை: பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் 3 பேர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெங்களூருவில் 3 அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த நபர்களை தமிழ்நாடு க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். இம்ரான்கான், முகமது சயித், முகமது ஹனீப்கான் என்ற மூவரும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு, போலியாக சிம்கார்டு மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை தயாரித்து கொடுத்ததாகவும், பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் அவர்களின் கொலை வழக்கில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாத ஒருங்கிணைப்பாளரின் கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வாகன சோதனையின் போது சுட்டு கொல்லப்பட்டார். இந்த விவகாரத்திலும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, தமிழ்நாடு க்யூ பிரிவு போலீசார் 10 நாட்கள் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்கள். அந்த அடிப்படையில் புழல் சிறையில் இருந்து இந்த 3 அடிப்படைவாத அமைப்புகளை சேர்ந்தவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி லோஸ்மின்துரை முன்பாக இது தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களையும் தமிழ்நாடு க்யூ பிரிவு போலீசார் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் 10 நாட்கள் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும், உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும், வேறு எந்தெந்த தீவிரவாத அமைப்புகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது? எப்படி எல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பதை விசாரிக்கவும் அனுமதி கேட்டிருந்தனர். அந்த பெயரிலே முழு 10 நாட்களையும் விசாரிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் பெங்களூர், கேரளா, டெல்லி ஆகிய இடங்களுக்கு எல்லாம் அழைத்து செல்லப்பட்டு தமிழ்நாடு க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags : Bengaluru ,militants ,court , Bangalore, Arrested, Terrorist, 3 Persons, 10 Days, Police, Egmore Court Permission
× RELATED தமிழர்களுக்கு எதிராக கருத்து...