×

நித்தியானந்தாவிடம் 2 பாஸ்போர்ட்டுகள்: கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் அம்பலம்

பெங்களூரு: நித்தியானந்தாவிடம் 2 பாஸ்போர்ட்டுகள் இருப்பது கர்நாடக சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில் தற்போது தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா எங்கோ ஒரு நாட்டில் இருந்து கொண்டு கைலாசா நாட்டினுடைய அதிபதி என்று தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரை கர்நாடக போலீசாரும், குஜராத் போலீசாரும் தீவிரமாக தேடி வருகிறார்கள். சமீபத்தில் நித்தியின் சிஷ்யர்களான சாரா மற்றும் அவருடைய தனி செயலாளரான ஜனார்த்தன் சர்மா உள்ளிட்ட ஆதரவாளர்கள், அவரை விட்டு வெளியே வந்து தொடர்ச்சியாக பல பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்தார்கள். ஏற்கனவே நித்தியானந்தாவிற்கு எதிராக, லெனின் கருப்பன் மற்றும் ஆதிரா ஆகிய இருவரும் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கானது, கர்நாடகா மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு சரியான முறையில் விசாரிக்கப்படவில்லை.

இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்ட லெனின் கருப்பன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் போது கர்நாடகா உயர்நீதிமன்றம், நித்தியானந்தா பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி எவ்வாறு வெளிநாட்டிற்கு தப்பி சென்றார்? உடனடியாக அவருடைய இருப்பிடத்தை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கர்நாடக சி.ஐ.டி. போலீசாருக்கு தீவிரமான ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவேண்டிய நிலையில், மேலும் இரண்டு நாட்கள் கழித்து விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார், கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நித்தியந்தா இருப்பிடம் குறித்து தீவிரமாக விசாரித்து வந்த போது, நித்தியானந்தாவுக்கு இரண்டாவது பாஸ்போர்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது பாஸ்போர்ட் இந்திய நாட்டு பாஸ்போர்டா? அல்லது வெளிநாட்டில் அவர் எடுத்ததா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. நித்தி பெற்ற முதல் பாஸ்போர்ட் 2018 செப்டம்பர் 30ல் காலாவதி ஆகிவிட்டது. தொடர்ந்து காலாவதியான பாஸ்போர்ட்டை புதுப்பிக்க இருமுறை நித்தி மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதனை நிராகரித்தது. அதனை தொடர்ந்து, அவர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் தான் தற்போது அவருக்கு இரண்டாவது பாஸ்போர்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாஸ்போர்ட் நகலையும் தற்போது சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த பாஸ்போர்ட்டை வைத்து நித்தியானந்தா எங்கெல்லாம் சென்றுள்ளார்? அவர் தற்போது எங்குள்ளார்? என்ற விசாரணையில் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : CID ,Nithyananda ,Karnataka ,police investigation , Nithyananda, 2 passports, Karnataka CID. Police, investigation, scandal
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!