×

இருக்கூர் ஊராட்சி கவுன்சிலர் கணவர் மரணத்தில் திடீர் திருப்பம்: ஊராட்சி துணைத் தலைவர் பதவியை பிடிக்க கொலை செய்ததாக கைதானவர் வாக்குமூலம்

நாமக்கல்:  நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்காக கவுன்சிலரின் கணவருக்கு மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து கொன்றது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமத்தி வேலூரையடுத்த இருக்கூரைச் சேர்ந்த செந்தில் குமார் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் நடத்திய விசாரணையில் உள்நோக்கத்தில் கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆறுமுகம் அளித்துள்ள வாக்குமூலத்தில் இருக்கூர் ஊராட்சி துணைத் தலைவராக தனது மனைவியை தேர்வு செய்வதற்கு ஆதரவுத்தர மறுத்ததால் மதுவில் ஆசிட் கலந்து கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

கபிலன் மலை ஒன்றியத்திற்குட்பட்ட இருக்கூர் ஊராட்சி மன்ற உறுப்பினராக செந்தில் குமாரின் மனைவி சத்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இந்த ஊராட்சியில் ஏற்கனவே துணைத் தலைவராக இருந்த ஆறுமுகம் தனது மனைவியை அந்த பதவியில் அமர்த்துவதற்காக செந்தில் குமாரிடம் ஆதரவு கேட்டுள்ளார். அவர் மறுத்ததால் விருந்து வைப்பதாக கூறி அழைத்து சென்று மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து கொலைசெய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  அவரோடு சேர்ந்து ஆசிட் கலந்த மதுவைக் குடித்ததால் பாதிக்கப்பட்ட மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  


Tags : death ,panchayat councilor ,Irukur , Eegur, Panchayat, Councilor, Husband, Death, Vice President, Position, Murder, Confession
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...