×

செக் நாட்டு பக்தர்கள் சதுரகிரியில் தரிசனம்

வத்திராயிருப்பு: சதுரகிரி கோயிலில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த 41 பேர் நேற்றுதரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், பவுர்ணமி மற்றும் பிரதோஷத்தையொட்டி, கடந்த 8ம் தேதி முதல் நாளை வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை செக் குடியரசு நாட்டில் இருந்து 25 பெண்கள், 16 ஆண்கள் ஆன்மீக பயணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். தாணிப்பாறை கேட்டில் வனத்துறை ஊழியர்கள், இவர்களது உடமைகளை சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். மலைக்கோயிலில் தங்கியிருந்து சாமி தரிசனத்தை முடித்துவிட்டு இன்று கிளம்புகின்றனர்.

குழுவிற்கு தலைமை தாங்கிய செக் குடியரசின் தாமஸ் பைபர் கூறுகையில், ‘‘எங்களுடைய ஆன்மீக குழு இந்தியாவில் பல்வேறு கோயில்களில் சுற்றுப்பயணம் செய்து தரிசனம் செய்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே இரண்டு முறை சதுரகிரிக்கு வந்துள்ளோம். இது இயற்கை எழில் சார்ந்த இடமாக உள்ளது. சதுரகிரிக்கு வந்தால் எங்களுக்கு மனதளவில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து 3 ஆண்டுகளாக சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க வந்துள்ளோம். நாங்கள் ஆன்மீக பயணத்தின்போது மது, போதை பொருட்கள் பயன்படுத்த மாட்டோம். அசைவ உணவு உண்ண மாட்டோம். இந்துக்களின் வழிமுறைகளை கடைப்பிடித்து தரிசனம் செய்து வருகிறோம்’’ என்றார்.

Tags : pilgrims ,Czech ,Sadhgiri ,Sathuragiri , Czech Country, pilgrims, Sathuragiri, vision
× RELATED துபாய் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றது சினியகோவா ஜோடி