போலி ஆவணங்கள் பெற்று பணி வழங்கியதாக முன்னாள் பேராயர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம்  பெற்றுக்கொண்டு மோசடி செய்த 7 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில், அரசு உதவி பெரும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளிகளில் நிர்வாகத்தின் மூலம் வேலை பார்க்கும் பணியாளர்கள், தகுதி வாய்ந்த அனுபவத்திற்கேற்ப, அரசு பணிக்கு மாற்றப்படுவார்கள். இவ்வாறு அரசு பணிக்கு மாற்றப்படுவதில் பல்வேறு குளறுபடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் போலி ஆவணங்கள் மூலமாக லட்சம் பெற்றுக்கொண்டு இந்த அரசு வேலையை அவர்களுக்கு வாங்கி தருகின்றனர். அதன்படியே தற்போது  ஒரு மோசடியானது எம்.கே.பி. காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இரண்டு பள்ளிகளில்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் என 7 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக லூயிஸ் ஆரோக்கியராஜ் என்ற இளநிலை உதவியாளர் பணியில் இருந்த ஒரு நபர், லஞ்சம் கொடுத்து அரசு பணியில் சேர்ந்ததாகவும்,  பணியை செய்யாமலேயே அவருக்கு அரசு பணி இருந்தது போன்றும், கடந்த 3 வருடமாக இவர் பணி செய்யாமலேயே 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சம்பளத்தை அரசின் மூலம் பெற்றிருக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது. இதன் மூலமாக பல லட்சம் ரூபாயானது அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கும் போது தான் சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெரும் பள்ளிகளில் எவ்வகையில் மோசடி நடைபெற்றுள்ளது என்பது அம்பலமாகும் என புகார்தாரர் மனுவில் தெரிவித்திருந்தார். மைக்கேல் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இந்த இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்பட 7 பேருக்கும் சம்மன் அனுப்பி தற்போது போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

Related Stories:

More