×

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து 30,344-க்கு விற்பனை: நகைக் கடைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து 30,344க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 குறைந்து ரூ.3,793 ஆக உள்ளது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.50.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி  கடந்த ஒரு மாத காலமாகவே ஏற்ற, இறக்கங்களைக் கண்டு வருகின்றது. கடந்த ஒரு வாரத்தில்  மட்டும் தங்கத்தின் விலை ரூ.1,552 உயர்ந்துள்ள நிலையில் இன்று சவரனுக்கு ரூ.96 குறைந்தது மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இதன் மூலம், தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 31 ஆயிரம் கீழ் வந்தது. இன்னும் சில நாட்களில் தை மாதம் பிறக்க இருப்பதால், திருமணத்திற்காக நகைகளை வாங்க காத்திருந்த பொதுமக்கள், மீண்டும் தங்கத்தின் விலை ஏறி விடுமோ என்கிற அச்சத்தில் நகைக் கடைகளை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

அமெரிக்க, ஈரான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதும் தங்கத்தின் விலையேற்றத்திற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டு வந்துள்ள நிலையில், தங்கத்தின் விலையில் இந்த திடீர் மாறுதல் பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதனால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் இன்று அலைமோதத் துவங்கியுள்ளது. சென்னையில் டிசம்பர் 2வது வாரத்தில் 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலை தை நெருங்கும் நிலையில் ஜனவரி பிறந்த போது 30 ஆயிரத்தை நெருங்கியது.

Tags : sovereign ,jewelery shops ,crowds , Gold, Shaving, Sales, Jewelery Shops
× RELATED 3 நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை போளூரில் பரபரப்பு