×

கரும்பு கொள்முதலில் தரகர்களின் ஆதிக்கம்: நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை

மதுரை:  பொங்கல் பரிசுடன் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கரும்பை விவசாயிகளிடமிருந்து அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இடைத்தரகர்கள் வைத்து கொள்முதல் செய்வதால் கடும் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கரும்பு விவசாயிகளிடமிருந்து  நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.

அங்குள்ள விவசாயிகள் கூறுகையில்,  பொங்கல் பண்டிகைக்கு கரும்பு அறுவடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை கொள்முதல் செய்வதற்கு அரசாங்கம் வரவில்லை. தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் கரும்புடன் பொங்கல் பரிசு வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே மாவட்டவாரியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதில்லை. வியாபாரிகளிடமும், இடைத்தரகர்களிடமும் தான் கொள்முதல் செய்கின்றனர். இதனால் இடைத்தரகர்கள்  எங்களிடம் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுடன் 2அடி நீளம் கரும்பும் வழங்கப்படுகிறது.  இதற்காக 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 300 ரூபாய் வரை அரசு தரப்பிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் இடைத்தரகர்கள் ஒரு கட்டு கரும்புக்கு 150 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Tags : brokers , Sugarcane, procurement, dominance, loss, farmers, agony
× RELATED வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில்...