×

பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கு: ஜார்கண்ட்டில் ஒருவர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் பத்திரிக்கையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட்டின் தன்பாத்தில் தலைமறைவாக இருந்த ருஷிகேஷ் தேவ்திகாரை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது. 2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி, பெங்களூர் நகரில், தனது வீட்டுக்கு வெளியே வைத்து, கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், புனேவில் தபோல்கர் வாக்கிங் சென்றபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு, பிப்ரவரியில் கோவிந்த் பன்சாரே மற்றும் ஆகஸ்டில், எம்.எம்.கல்பூர்கி ஆகியோரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

இவர்கள் அனைவருமே, இடதுசாரி சிந்தனையாளர்கள் என்பதால், கொலைகள் நடுவே ஏதோ இணைப்பு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து, நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சரத் கலாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவர் கர்நாடக காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தபோல்கரை தான்தான் சுட்டுக் கொன்றதாகவும், கவுரி லங்கேஷ் கொலையில் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட்டின் தன்பாத்தில் தலைமறைவாக இருந்த ருஷிகேஷ் தேவ்திகாரை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது.

Tags : Gauri Langesh ,Murder ,journalist ,Jharkhand , Journalist, social activist, Gauri Lankesh, arrested
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...