×

போலீஸ் வேன் மீது ஏறி நடனம் ஆடியவர் கைது

சென்னை : ரஜினி நடத்துள்ள தர்பார் திரைப்படம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேற்று  வெளியானது.  நள்ளிரவு முதலே தர்பார் வெளியாகும் திரையரங்குகள் முன்பாக திரளான ரசிகர்கள் காத்திருந்தனர். படம் திரையிடப்பட்டதும் பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது உற்சாகம் மிகுதியில் போலீஸ் வாகனம் மீது நடனம் ஆடிய கோபால் (39) என்பவரை கைது செய்தனர்.


Tags : arrest ,police van , Police van, dancer, arrested
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!