×

டெல்லி, குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டம் தமிழக தீவிரவாதிகள் 4 பேர் கைது

புதுடெல்லி: டெல்லி, குஜராத்தில் பயங்கரவாத தாக்குதலைநடத்த திட்டமிட்ட ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.உபி மாநிலம் வஜிராபாத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பதுங்கியிருந்த 3 பேரை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர். இதுபற்றி துணைக் கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வா (சிறப்பு பிரிவு) மேலும் தெரிவித்ததாவது:கைது செய்யப்பட்ட மூவரும் தமிழ்நாட்டை சேர்ந்த காஜா மொய்தீன் (52), அப்துல் சமீம் (28), சையத் அலி நவாஸ் (32) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களில் இருவர் இந்து முன்னணி தலைவரான திருவள்ளூரைச் சேர்ந்த கே.பி.சுரேஷ்குமாரின் கொலை வழக்கில் சிக்கி நிபந்தனை ஜாமீனில் வெளியில் இருந்து வந்துள்ளனர்.இந்நிலையில், இந்த மூன்று பேரும் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்துடன் தமிழகத்திலிருந்து நேபாளம் வழியாக டெல்லிக்கு வந்து வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த சமயத்தில் தான் அவர்கள் மூவரையும் மடக்கி கைது செய்தோம்.

முதற்கட்ட விசாரணையில் மொய்தீனுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் கே.பி.சுரேஷ்குமாரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்தியாவில் பயங்கரவாத அமைப்பின் நெட்வொர்க்கை விரிவுபடுத்த திட்டமிட்டு இருந்தார்.மொய்தீன் தனது பல்வேறு மறைவிடங்களில் இருந்தவாறு இளைஞர்களுடன் ஆலோசிக்கவும், அவர்களை ஐஎஸ் இயக்கத்துடன் இணைப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் மூடிய அறைக்குள் ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளார். இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் உள்ள நபரால் வழிநடத்தப்படுகிறார்கள்.மொய்தீன் மற்றும் அவரது கூட்டாளிகளான சையத் அலி நவாஸ், அப்துல் சமத், அப்துல் ஷமீம், தோபிக் மற்றும் ஜாபர் அலி ஆகியோர் பதுங்கியிருந்த தங்களது இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் தப்பிக்க முடிவு செய்திருந்தனர். இதற்காக அவர்கள் மூன்று பேர் குழுக்களாக பிரிந்தனர். போலி ஆவணங்களின் உதவியுடன் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பின்னர் மொய்தீன், நவாஸ் மற்றும் சமத் ஆகியோர் நேபாளத்தின் காத்மாண்டு சென்றனர். அங்கு தங்களுக்கான அடித்தளத்தை அமைத்த பின்னர் இந்தோ-நேபாள எல்லை வழியாக மீண்டும் டெல்லிக்கு வந்துள்ளனர்.

டெல்லியில் அவர்கள் ஆயுதங்களை வாங்கி உள்ளனர். இவர்களுக்கு உள்ளூர் நபர் ஒருவர் உதவியுள்ளார். இது  அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வழிநடத்தப்படும் நபரின் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், தான் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, குஜராத்திலும் ஒரு தமிழக தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளன்ர.  கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாபர் அலி என்ற நபர் ஐஎஸ் ஆதரவாளர் என்று தெரியவந்துள்ளது. இவர் குஜராத்தின் வதோதரா நகரின் கோர்வா பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

* போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் பதுங்கியிருந்த 3 பேரை துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.
* இவர்களுக்கு உள்ளூர் நபர் ஒருவர் உதவியுள்ளார். இது  அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வழிநடத்தப்படும் நபரின் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : terrorists ,Delhi ,attack ,Gujarat Four ,militants ,Tamil , launch , attack , Delhi, Gujarat,arrested
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...