×

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் சாய்னா, சிந்து காலிறுதிக்கு தகுதி

கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால், பி.வி. சிந்து காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2வது சுற்று போட்டியில், உலக தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நேவால்,  தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள தென் கொரியாவை சேர்ந்த அன்சே யங்-வுடன் மோதினார். சுமார் 39 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதல் அசத்திய சாய்னா நேவால்,  முதல் செட்டை 25-23 என வென்றார். இதனைத்தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடிய சாய்னா 21-12 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வென்றுகாலிறுதிக்கு தகுதி பெற்றார்.  சாய்னா நேவால் அன்சே யங்-ஐ முதன்முதலாக வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் அவர் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை எதிர்கொள்கிறார்.

மற்றொரு போட்டியில், பி.வி. சிந்து, ஜப்பானின் அயா ஒஹோரியை 21-10, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இவர் காலிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூ யிங்கை எதிர்கொள்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்தியாவின் காஷ்யப், நம்பர் ஒன் வீரரும், உலக  சாம்பியனுமான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவுடன் மோதினார். இப்போட்டியில் மோமோட்டா 21-17, 21-16 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சமீர் வர்மா மலேசியாவின் லீ ஜியாவிடம் 19-21, 20-22 என போராடி  தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.

Tags : Malaysia Masters Badminton Saina ,quarter-finals ,Indus , Malaysia, Masters , Saina, Indus ,quarter-finals
× RELATED அபுதாபி ஓபன் காலிறுதியில் ஆன்ஸ்