×

துறைமுகம் தொகுதி காந்தி நகரில் உள்ளவர்களை பெரும்பாக்கத்திற்கு மாற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது: பேரவையில் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் துறைமுகம் தொகுதி பி.சேகர்பாபு(திமுக) பேசியதாவது: சென்னை நதிகள் பாதுகாப்பு திட்டத்தின்படி துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்தி நகரில் உள்ள 2200 வீடுகளை அகற்றி, அப்பகுதி மக்களை பெரும்பாக்கம் அனுப்புகிற பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னை தொடர்பாக, 2017, 2018, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் அவையின் கவனத்திற்கு நான் கொண்டு வந்தபோது, துணை முதல்வர் நிச்சயமாக, அந்த பகுதியிலேயே இடம் தேர்வு செய்து அவர்களுக்கு வீடுகளை கட்டி தருவோம் என்றார்.நானும், இதற்காக 5 ஏக்கர் இடம் வால்டாக்ஸ் சாலையில் இருக்கிறது, என தெரிவித்தேன். திடீரென வசிக்கும் பகுதியில் இருந்து அவர்களை 40 கி.மீ. தூரம் தள்ளி மறு குடியமர்வு செய்வதால், அவர்களின் தொழில், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படுகிறது.

இங்கே 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றார்கள். ஆண்டு இறுதி தேர்வை நெருங்கி கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் அவர்களை அங்கே கொண்டு சென்று குடியமர்த்தினால் படிப்பும் கேள்விக்குறியாகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் இல்லாத குடும்பங்கள் பெரும்பாக்கம் பகுதிக்கு செல்ல தாமாகவே விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த 5ம் தேதி வரை 590 குடும்பங்கள் சத்தியாணி முத்து நகரிலில் இருந்து பெரும்பாக்கம் திட்ட பகுதிக்கு மறு குடியமர்வு செய்யப்பட்டனர். மேம்படுத்தும் வகையில் தொழிற்பயிற்சி, சிறுதொழில் செய்ய பொருளாதார உதவிகள் மற்றும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் போன்றவவைகள் வழங்கப்பட்டு வருகிறது.



Tags : many ,PK Shekharbabu MLA ,Gandhi , port, Gandhi, majority, PK Sekharbabu MLA ,Assembly
× RELATED கருடன் கருணை