×

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பெரம்பூர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் ரம்யா (19). இவர், பெரம்பூர் அடுத்த பெரியார் நகரை சேர்ந்த ரோஷன் (21) என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துள்ளார்.  இவர்கள், நேற்று முன்தினம் இரவு பெரவள்ளூர் உதவி ஆணையர் அலுவலகத்தில்  புகார் ஒன்றை கொடுத்தனர்.அதில், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த நாங்கள்  காதல் திருமணம் செய்ததால், எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என கூறியிருந்தனர். தகவலறிந்து இரு தரப்பினர் சார்பில் 30க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உதவி ஆணையர் சுரேந்தர், அவர்களை  அழைத்து  பேசி சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, காதல் தம்பதி அங்கிருந்து சென்றனர்.

Tags : police station ,Love , police ,station, Love couple asylum
× RELATED புறநகர் பகுதி கட்டுமான பணிகளில்...