×

பிளாஸ்டிக் பேனர், பதாகை தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் பிளாஸ்டிக் பேனர்கள், விளம்பர பதாகைகள் பயன்படுத்துவது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து எட்வின் வில்சன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் `தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேனர்களால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் பயனுள்ள உத்தரவை வழங்கவில்லை’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுற்றுச்சூழல்- வனத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை 4 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.



Tags : Election Commission , Plastic, banner, banner, Commission
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...