×

சட்டவிரோதமாக தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி : திமுக எதிர்ப்புசட்டவிரோதமாக தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி : திமுக எதிர்ப்பு

சென்னை: அரசின் ஒப்புதல் இல்லாமல் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது சட்ட விரோதம் என்று திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வது தொடர்பாக கொண்டு வரப்பட்ட மசோதா மீது காஞ்சிபுரம் எழிலரசன் (திமுக) பேசியது: தமிழ்நாடு இசை பல்கலை மூலம் தனியார் கல்லூரிகளுக்கு அரசின் ஒப்புதல் இல்லாமல் அனுமதி அளித்தது சட்ட விரோதம். எந்த அடிப்படையில் அந்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த கல்லூரிகளுக்கு அமைச்சரின் ஒத்திசைவு உடன் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சட்ட விரோத அனுமதிக்கு திமுக துணை போக முடியாது.

அமைச்சர் பாண்டியராஜன் : எந்த சட்டமீறல்களும் நடைபெறவில்லை. இந்த தனியார் கல்லூரிகளுக்கு பல்கலை சார்பில் அமைக்கப்பட்ட குழு மூலம்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலையின் கீழ் 9 அரசு கல்லூரிகள் உள்ளது. 2 உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளது. இதை தவிர்த்து 14 தனியார்களுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். இந்த கல்லூரிகளில் 860 மாணவர்கள் படிக்கின்றனர். மற்ற மாநிலங்களை காட்டிலும் பாடத்திட்டங்கள் திட்டங்கள் வகுக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே நமது பல்கலைதான் முதலிடம் இடம்பிடித்துள்ளது.
இதை தொடந்து அந்த சட்ட மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.


Tags : colleges ,DMK ,protest , Illegal private colleges allowed, DMK protest
× RELATED இலவச கண் சிகிச்சை முகாம்