வெள்ளி வியாபாரிகளிடம் 30ஆயிரம் லஞ்சம் ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் டிஸ்மிஸ்

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த வெள்ளி வியாபாரிகளான கோபி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 2018 ஜூன் மாதம், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு ரயிலில் 60 கிலோ வெள்ளி கொலுசுகளை கொண்டு சென்றனர். அப்போது, சேலம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சம்பத், போலீஸ்காரர் சண்முகம் ஆகியோர் முறையான ஆவணங்கள் இல்லை என கூறி 30 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளனர். இதை செல்போனில் பதிவு செய்த அவர்கள் ரயில்வே அமைச்சகத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக, சேலம் ரயில்வே பாதுகாப்புபடை கமிஷனர் விசாரணை நடத்தி,  இன்ஸ்பெக்டர் சம்பத், போலீஸ்காரர் சண்முகம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டு, சென்னை ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பீரேந்திரகுமாருக்கு அறிக்ைக அனுப்பி வைக்கப்பட்டது. இதை பரிசீலித்த அவர், இருவரையும் டிஸ்மிஸ் செய்தார். 

Related Stories:

>