அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை 2 ஆசிரியர்களுக்கு மக்கள் அடி, உதை

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே ஜக்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், அரூரைச் சேர்ந்த லட்சுமணன்(38), சின்னமுத்து(34) ஆகிய இருவரும், வரலாற்று ஆசிரியர்களாக உள்ளனர். . இருவரும், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் இருவரும், அந்த மாணவியிடம் எல்லை மீறி நடக்க முயன்றனர். இதுபறறி அவர் தாயிடம் கூறவே ஊர்மக்கள், 100க்கும் மேற்பட்டோர்  நேற்று பள்ளிக்கு சென்று போதையில் இருந்த 2 ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கினர். தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார், ஆசிரியர்கள்  இருவரையும் மீட்டு கைது செய்தனர். பின்னர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆசிரியர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என்றுகூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்குஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Tags : teachers ,public school ,student , 2 teachers , public school, sexually assaulted, student
× RELATED போக்சோவில் முதியவர் கைது