×

தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை : சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்துள்ள தர்பார் திரைபடத்தை இணைய தளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில்,  லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தர்பார் படத்தை  இணையத்தளங்களில் வெளியிட தடைக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லைக்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியம், சட்டவிரோதமாக இணையத்தில் தர்பார் படத்தை வெளியிடுவதால் மனுதாரருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் எனவே இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, தர்பார் திரைப்படத்தை 1,370 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

Tags : Dharbar , Dharbar image banned , publishing on websites
× RELATED சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில்...