×

ஜோலார்பேட்டை நகராட்சியில் பேட்டரி வாகனங்களில் குப்பை சேகரிப்பு

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை நகராட்சியில் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் பயன்பாட்டுக்கு வந்தது. ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வார்டுகளில் நகராட்சி சார்பில் வீடு, வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு நகராட்சி வாகனத்தில் கொண்டு வரப்படுகிறது. பின்னர் இந்த குப்பைகளை இயற்கை நுண்ணுயிர் உரமாக மாற்றி சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு கடந்த வாரம் பேட்டரி மூலம் இயங்கும் 13 வாகனங்கள் வழங்கப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் ராமஜெயம், பொறியாளர் தனபாண்டியன், சுகாதார ஆய்வாளர் உமா சங்கர் ஆகியோர் பேட்டரி மூலம் இயங்கும் வாகனத்தில் குப்பைகள் வாங்கும் முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

Tags : municipality ,Jolarpet , Jolberpet, Municipal, Battery Vehicles, Garbage collection
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை