×

வீதியில் உலா வந்த ராட்சத முதலை: பொதுமக்கள் பிடித்து அணைக்கரையில் விட்டனர்

தா.பழூர்: தா.பழூர் அருகே வீதியில் உலா வந்த ராட்சத முதலையை பொதுமக்கள் பிடித்து அணைக்கரையில் விட்டனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிய வறட்சிகாாலத்திலும் வற்றாமல் தண்ணீர் இருக்கும். இந்த ஏரியில் முதலைகள் நடமாவடுவதை மக்கள் பார்த்துள்ளனர். நேற்று சாலையின் ஓரமாக ஒரு ராட்சத முதலை செல்வதை கண்ட பொதுமக்கள் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களை எழுப்பி கயிறுகளை கொண்டு முதலையை லாவகமாக பிடித்து கட்டிபோட்டனர்.

பிடிபட்ட முதலை 150 கிலோ எடை சுமார் 10 அடி நீளம் கொண்டது. இந்த முதலை கோவிந்தபுத்தூர் மாரியம்மன் கோவில் வடக்குத் தெருவில் சாலையோரம் சென்ற பொழுது பொதுமக்கள் பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனக்காப்பாளர் பாலு மற்றும் வனகாவலர்கள் இராஜேந்திரன் முருகேசன் ஆகியோர் முதலையை மீட்டு கொள்ளிடம் அணைக்கரை கீழணையில் விட்டனர். கோவிந்தபுத்தூர் பெரிய ஏரியில் மேலும் பல முதலைகள் கிடக்கலாம். எனவே ஏரியை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : streets ,civilians ,yard , Road, Giant Crocodile, Public
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...