×

சேலத்தில் சிவப்பு பாதரசம் இருப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பல் கைது

சேலம்:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள அத்திப்பள்ளியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது செல்போனில் பேசிய ஒரு நபர் தன்னிடம் அணுஆயுதம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவத்திற்கு பயன்படும் சிவப்பு பாதரசம் இருப்பதாகவும் இது 1 மி.கி ரூபாய் 3 கோடி வரை விற்கப்படுவதாகவும், இதை விற்று தந்தால் லட்சக் கணக்கில் பணம் தருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் சேலத்தில் வைத்து சதிஷ்குமாரை 5 நபர்கள் வந்து சந்தித்து, செல்போனில் படம் பிடித்து வைத்திருந்த சிவப்பு பாதரசத்தை காண்பித்ததுடன், மற்றொரு செல்போனில் பண கட்டுகளை காண்பித்துள்ளார்.

இதை நம்பாத சதீஸ்குமார் இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் செந்தில் குமாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் இன்று காலை சதீஸ்குமாருடன் சாதாரண உடையில் சென்ற போலீசார், அப்போது வந்திருப்பது போலீசார் என்பது தெரியாமல் அவர்களிடம் 5 பேரும் செல்போனில் சிவப்பு பாதரசத்தை காட்டி பேரம் பேசியுள்ளனர். இதையடுத்து பாண்டிராஜன், புருஷோத்தமன், கண்ணதாசன் உள்ளிட்ட 5 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இவர்களில் கண்ணதாசன் என்பவர்  கோட்டகிரியை சேர்ந்த சித்தமருத்துவர் என்றும், இவர் இதுபோல பலரை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags : Salem , Salem, red mercury, money, fraud gang, arrested
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...