லேம்ஸ் ராக் செல்லும் நடைபாதை சேதமடைந்தது: சீரமைக்க கோரிக்கை

குன்னூர்: குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாக டால்பின் நோஸ் மற்றும் லேம்ஸ்ராக் காட்சி முனை உள்ளது. இந்த பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு வன விலங்குகள் குறித்து எவ்வித விழிப்புணர்வும் இல்லாததால் தேயிலை தோட்டங்களுக்குள் சென்று புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர். காட்டுமாடுகள் அதிகளவில் அப்பகுதியில் சுற்றி திரிவதால் அவற்றை பற்றி அறியாமல் தேயிலை தோட்டங்களுக்குள் செல்வதால் அவை தாக்கும் அபாயம் நிலவி வருகிறது.

தற்போது அந்த காட்சி முனை பகுதிக்கு செல்லக்கூடிய நடைபாதை சேதமடைந்தது உள்ளதால்  குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சென்று வர சிரமமடைந்து வருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் நலன்கருதி நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : corridor ,Lams Rock , Lames Rock, corridor, request to revamp
× RELATED ஒரே பைக்கில் சென்ற 3 வாலிபர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ