×

நாடாளுமன்றத்தை தொடர்ந்து ஆங்கிலோ - இந்திய நியமன உறுப்பினர் முறை ரத்து செய்யும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்திய நியமன உறுப்பினர் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமன உறுப்பினர் முறையை ரத்து செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஆங்கிலோ - இந்திய நியமன உறுப்பினர் முறை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மொத்தம் உள்ள 234 உறுப்பினர்களை தவிர்த்து, 235-வது நியமன உறுப்பினராக ஆங்கிலோ இந்தியன் சமூகத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது மரபு. கடந்த 5 ஆண்டுகளாக நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியன் நியமன உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ - இந்திய நியமன உறுப்பினர் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலோ இந்தியன் நியமன எம்எல்ஏ எதன் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறார் என்று தெரியுமா?

முற்காலத்தில், ஆங்கிலேயேர்கள் இந்தியாவில் வந்து வணிகம் செய்தபோது, தங்களுக்கான இணையர்களை இந்தியாவிலேயே தேர்ந்தெடுத்தனர். இதன் காரணமாக, அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் 2 நியமன எம்பிக்களுக்கும், எட்டு மாநிலங்களில், தலா ஒரு நியமன எம்எல்ஏவும் வழங்கி பிரிநிதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆங்கிலோ இந்திய மக்களுக்கு உரிய பிரிநிதித்துவம் இல்லாத பட்சத்தில், அந்த சமுதாயத்தில் இருந்து ஒருவரை நியமன எம்எல்ஏ-வாக நியமனம் செய்ய மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏவாக நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் பணியாற்றி வந்தார்.


Tags : parliament ,passage ,Anglo-Indian ,Tamil Nadu Legislative Assembly ,Indian ,Bill , Legislative Assembly, Anglo - Indian, Appointment, Membership, Method, Cancellation, Bill
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...