×

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு: தீபிகா படுகோனாவின் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளித்தது ம.பி அரசு

போபால்: நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகியுள்ள படத்திற்கு மத்தியப் பிரதேச அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. ஆசிட் வீச்சால் பாதிப்பட்டு பின்பு அதற்கு எதிராக போராடும் பெண்ணாக மாறிய லட்சுமி அகர்வாலின் வாழ்க்கை வாரலாறு என்ற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. மேக்னா குல்சார் இயக்கியுள்ள இப்படத்தில் லட்சுமி அகர்வாலாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தீபிகாவே தயாரித்துள்ளார்.

இதனிடையே, ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்திற்கு நேரில் சென்று தீபிகா படுகோன் ஆதரவு தெரிவித்து இருந்தார். இதற்கு ஒரு தரப்பினர் பாராட்டு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் விமர்சனங்களை முன் வைத்ததோடு சபாக் படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

படத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்துவிட்டோம் என ட்விட்டரில் பலரும் தங்களது டிக்கெட்டை படம் எடுத்து பதிவிட்டனர். இருப்பினும், ஒரே டிக்கெட்டை பலரும் பதிவிட்டரும் கிண்டலுக்கு ஆளானது. தீபிகா படுகோன் தயாரித்து நடித்துள்ள சபாக் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்திற்கு மத்திய பிரதேச அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. இதனிடையே, படத்தின் முன்னோட்ட காட்சிகளுக்கான விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. படம் நல்ல முறையில் எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் விமர்சனங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Deepika Padukone ,Government ,JNU ,Saab ,protests , JNU students protest, Deepika Padukone, Safaq movie, tax exemption, MP government
× RELATED உலக தரவரிசை வெளியீடு இந்தியாவின் சிறந்த பல்கலை. ஜேஎன்யு