×

காரியாபட்டியில் சாலையோரங்களில் குவிக்கப்படும் கோழிக்கழிவுகளால் துர்நாற்றம்: வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் அவதி

காரியாபட்டி: காரியாபட்டியில் சாலையோரங்களில் குவிக்கப்படும் கோழிக்கழிவுகளால் துர்நாற்றம் வீசி, அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், குடியிருப்புவாசிகளும் அவதிப்படுகின்றனர். காரியாபட்டியில் பத்துக்கும் மேற்பட்ட கோழிக்கறிக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினசரி 1500 கிலோவுக்கு மேல் கோழிக்கறி விற்பனையாகிறது. திருவிழா காலங்களில் குறைந்தபட்சம் 3 ஆயிரம் கிலோ வரை விற்பனையாகிறது.இந்நிலையில், கடைகளில் சேகரமாகும் கழிவுகளை நகரில் உள்ள அருப்புக்கோட்டை-மதுரை சாலையில் இரவு நேரங்களில் கொட்டுகின்றனர். தினசரி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். இதேபோல, ஐயப்பன் கோயில், ஜே.ஜே காலனி ஓடையிலும் கோழிக்கழிவுகளை கொட்டுகின்றனர். கோயிலுக்கு சாமிகும்பிட வருவோர் முகம் சுளிக்கின்றனர். இந்த கழிவுகளால் ஒரு கி.மீ தூரத்திற்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன்கருதி காரியாபட்டியில் சாலையோரங்களில் கோழிக்கழிவுகளை கொட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : residents ,motorists , Roadblocks, Kariyapatti , caused,stench, motorists and residents
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...