×

வன்முறையை நிறுத்தினால் மட்டுமே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்குகள் விசாரணை: தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

டெல்லி: வன்முறையை நிறுத்தினால் மட்டுமே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் மனுக்களை விசாரிப்பதால் அமைதி திரும்பும் என எண்ண முடியவில்லை என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார். தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தமிழகத்திலிருந்து திமுக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பாகவும், நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தனிநபர்கள் சார்பாகவும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த வழக்குகள் எப்பொழுது விசாரிக்கப்படும் என்பது தொடர்பாக தெளிவான விவரத்தை இதுவரை உச்சநீதிமன்றம் குறிப்பிடவில்லை. எனவே இந்த வழக்குகள் எப்போது விசாரிப்பீர்கள் என்று சில வழக்கறிஞர்கள் இன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக, கோரிக்கை விடுத்தனர்.

அச்சமயம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.ஏ.பாப்டே, நாடு முழுவதும் நடைபெற்று வரக்கூடிய இந்த போராட்டம் மற்றும் வன்முறை நிறுத்தப்பட்டால் மட்டுமே தாங்கள் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த சம்பவங்கள் கடுமையான சூழலை நிலவுவதை எங்களால் உணர முடிகின்றது. எனவே நாங்கள் இந்த வழக்கை எடுத்து விசாரிப்பதன் மூலம் அமைதி திரும்ப வேண்டும் என எண்ணக்கூடிய விஷயமாக இருக்கிறது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில், அவ்வாறான அமைதி திரும்பும் என்பதை எங்களால் உறுதியாக நினைக்க முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த வன்முறைகள் மற்றும் சட்டத்திற்கு எதிராக தீவிரமாக நடைபெற்று வரக்கூடிய போராட்டங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டால் மட்டுமே தாங்கள்  குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க முடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளனர். தொடர்ந்து, ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல் அதேபோல ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் என்பது ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும், நாடு முழுவதும் மற்றொருபுறம் அமைதியான வழியில் தொடர்ச்சியான போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தவண்ணம் தான் இருக்கிறது.

ஆயிரகணக்கான மக்கள் சாலையில் இறங்கி போராடக்கூடிய காட்சிகள் என்பது தினந்தோறும் அரங்கேறி வருகிறது. எனவே உச்சநீதிமன்றம் உடனடியாக இதில் தலையிட்டாக வேண்டிய சூழ்நிலை இருக்கக்கூடிய நேரத்தில் தற்போது தலைமை நீதிபதி இப்படி ஒரு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தற்சமயம் இந்த வழக்கு என்பது உடனடியாக விசாரணைக்கு வரும் என்பதில் சந்தேகமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. வழக்குகளில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்து மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Tags : Chief Justice ,SA Bapte , Violence, Termination, Citizenship Law Amendment, Prosecution, Investigation, Chief Justice SA Bapte
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...