×

இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு: பனி மூடிய பள்ளத்தாக்கில் சிக்கிய 43 பேர் பத்திரமாக மீட்பு

சிம்லா:  டெல்லியில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குளிர் காணப்பட்டது.  அதேபோன்று இமாச்சலப் பிரதேசத்திலும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இங்கு கடுமையான பனிமழை பெய்து வருவதால் எங்கும் வெண்பனி சூழ்ந்திருக்கிறது. ஆகையால் 588 முக்கிய சாலைகள் பனியால் மூடப்பட்டிருப்பதால், போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருகாத்திருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் 2500 மின்கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சார வசதியும் பாதிக்கப்பட்டுள்ளது.  33 குடிநீர் விநியோக திட்டங்களும் இதனால் பாதிப்படைந்துள்ளது. மேலும் இங்கு 88 மாவட்டங்களில் பனியால் பாதிக்கப்பட்டுள்ளது.  

சுமார் 1அடி ஆழத்திற்கு பனி மூடியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த காலநிலைக்குறித்து சிம்லா வானிலை ஆய்வு மையம் சிம்லா, சிர்மர், மண்டி சம்பா ஆகிய பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ளனர். இதனால் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இங்கு முக்கிய சுற்றுலா தலங்களான சிம்லா, மணாலி, டல்ஹவுசி உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப நிலையானது பூஜ்ஜியம் டிகிரிக்கு கீழே பதிவாகியுள்ளது.  இதனிடையே சிம்லா, கோட்டி, சார்ப்பாரா ஆகிய பகுதிகளில், சுற்றுலா சென்று பனிமூடிய பள்ளத்தாக்குகளில் சிக்கி தவித்த 43 பேரை இராணுவத்தினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.  


Tags : Himachal Pradesh , Himachal Pradesh, snowfall, valley, recovery
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...