×

தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்பயா கொலைக் குற்றவாளி வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு

புதுடெல்லி : தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்பயா கொலைக் குற்றவாளி வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளார்.டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வினய் சர்மா உட்பட குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கின் பிண்ணனி

*டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நள்ளிரவில் ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டார். மீட்கப்பட்ட அப்பெண், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அதே மாதம் 29ம் தேதி உயிரிழந்தார்.

*இதுதொடர்பான வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர், திகார் சிறையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். மற்ற 5 பேரில், சிறுவன் என்பதால் சிறார் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைவாசத்தை அனுபவித்த பின் விடுவிக்கப்பட்டு தற்போது மத்திய அரசின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

*மற்ற 4 குற்றவாளிகளான முகேஷ்(32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26) மற்றும் அக்‌ஷய் குமார்(31) ஆகியோருக்கு விரைவு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி செப்டம்பர் 2013ல் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் நிராகரிக்கப்பட்டு கீழ் நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தன.

*அதன்பின்னர் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இறுதி வாய்ப்பாக, கருணை மனுக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

*இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த இறுதி உத்தரவில், வரும் ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு நால்வரையும் திகார் சிறையில் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றனர். எனினும், கருணை மனு மீது சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தைநீதிமன்றம் வழங்கியுள்ளது.

*டெல்லி திகார் ஜெயிலில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில்,  தூக்கு தண்டனையை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி வினய் சர்மா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Tags : murder convict ,Vinay Sharma appeals Supreme Court Nirbhaya ,Vinay Sharma appeals Supreme Court , Execution, Nirbhaya, Murder, Offender, Restraint, Petitioner, Vinay Sharma, Medical Student, Supreme Court
× RELATED ராஜூவ்காந்தி கொலை குற்றவாளி ராபர்ட்...