×

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளின் தூதர்கள் இன்று வருகை: ஐரோப்பிய யூனியன் நாடுகள் தவிர்ப்பு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் கென்னத் ஜே ஜஸ்டர் உள்ளிட்ட 16 நாடுகளின் தூதர்கள் இன்று செல்கின்றனர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் கடந்த அக்டோபர் மாதத்தில் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் வந்து சென்றனர். அதன்பின் இப்போது 16 நாடுகளின் தூதர்கள் வருகை தருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், வியாழக்கிழமை டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்படும் 16 நாடுகளின் தூதர்களும் ஸ்ரீநகர் சென்று அங்கு இரவு தங்குகின்றனர். இன்று இரவு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஆளுநர் ஜி.சி முர்மு, சிவில் சமூகத்தின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகின்றனர். நாளை ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிக்குளுக்குச் சென்று மக்களிடம் பேச உள்ளனர். பல்வேறு சமூகக் குழுக்களைச் சந்தித்துப் பேசும் 16 நாடுகளின் தூதர்கள் பாதுகாப்பு வசதிகள், உரிமைகள் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிகின்றனர். இந்த 16 நாடுகளில் அமெரிக்கா, வங்கதேசம், வியட்நாம், நார்வே, மாலத்தீவுகள், தென் கொரியா, மொராக்கோ, நைஜிரியா, உஸ்பெகிஸ்தான், கயானா, பிலிப்பைன்ஸ், பெரு உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் செல்கின்றனர்.

பிரேசில் நாட்டு தூதர் அன்ட்ரா ரானா கோரியா டோ லாகோ ஜம்மு காஷ்மீர் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென தங்கள் நாட்டு சார்பான பணி வந்ததால், தனது திட்டத்தை ஒத்திவைத்துள்ளார் எனத் தெரிவித்தனர். இதற்கிடையே ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்கள் தாங்கள் வேறு ஒரு தேதியில் ஜம்மு காஷ்மீருக்குச் செல்ல மத்திய அரசிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். மேலும் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரைச் சந்திக்கவும் மத்திய அரசிடம் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் தடுப்புக்காவலில் இருக்கும் யாரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்ததாகக் கூறவில்லை. மற்றொரு நாளில் அவர்கள் ஜம்மு காஷ்மீருக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்கள். ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்கள் மொத்தமாக ஜம்மு காஷ்மீருக்கு வருவதாகத் தெரிவித்தனர். ஆனால் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் மொத்தமாக அனுமதிப்பதில் சிரமம் இருப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் தங்கள் நாடுகளின் தலைமை அலுவலகத்தில் அனுமதி பெற்றபின் வருவதாகத் தெரிவித்தனர் என கூறினர்.

Tags : Ambassadors ,countries ,visit ,Jammu and Kashmir ,state ,US ,Kashmir ,European Union , Jammu and Kashmir, 2 Days, Travel, USA, 16 Countries, Ambassadors, Today, Visit
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...