×

எதிர்ப்புக்கு பணிந்தார் மோடி! : நீங்க வந்தா போராடுவோம் என்ற செய்தி வெளியானதால் அசாம் பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி

டெல்லி : குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி தனது அசாம் பயணத்தை ரத்து செய்திருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கவுகாத்தியில் நாளை இளைஞர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டி தொடங்குகிறது. இதனை பிரதமர் மோடி நேரடியாக சென்று தொடங்கி வைப்பதாக இருந்தது. மோடி வந்தால் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாணவ அமைப்பினரும் எதிர்கட்சியினரும் தெரிவித்து இருந்த நிலையில், அவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

அசாமை தொடர்ந்து நாளை மேற்கு வங்கம் செல்ல இருந்ததையும் மோடி கைவிட்டுள்ளார். இதையடுத்து அசாம் மாநிலம் முதல்வர் சர்பானந்தா சோனாவால் நாளை டெல்லி சென்று மோடியை சந்திக்கிறார். அப்போது காணொளிக் காட்சி மூலம் போட்டியைத் தொடங்கி வைக்குமாறு அவர் வலியுறுத்தி இருப்பதாக தெரிகிறது. அதன் பிறகு 22ம் தேதி நடக்க உள்ள போட்டியின் இறுதி விழாவில் கலந்து கொள்ளுமாறு மோடியை அழைக்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார். இதனிடையே வரும் 2ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான வேலைகளையும் பிரதமர் மோடி ஒருபுறம் மேற்கொன்டு வருகிறார். அண்மையில் கார்ப்ரேட் நிறுவன அதிபர்களை சந்தித்து உரையாடிய மோடி, இன்றைக்கு டெல்லியில் பொருளாதார நிபுணர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.


Tags : Assam Modi ,Assam , Prime Minister Modi, Northeast, Citizenship, Assam, Travel
× RELATED செல்போனில் பேசியபடி சாலையை கடந்த பெண் பைக் மோதி உயிரிழப்பு