×

சாத்தான்குளம் அருகே அறிவான்மொழி - தேரிப்பனை சாலை மழை நீரால் அரிப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே அறிவான்மொழியில் இருந்து தேரிப்பனை செல்லும் சாலையில் மழை நீரால் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள அறிவான்மொழியில் இருந்து தேரிப்பனை, பிடானேரி, நாசரேத் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக அரசு பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று திரும்புகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் சைக்கிளில் சென்று வருகின்றனர். இந்த சாலை அபாய நிலையில் காணப்பட்டதால் கடந்த 4 மாதங்களுக்கு முன் புதியதாக சாலை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழைக்கு அறிவான்மொழியில் இருந்து தேரிப்பனை இடையே சாலையோரம் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படாத வகையில் சாலையோரம் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் கற்கள் மற்றும் தென்னை மட்டைகள் அடையாளமாக வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சாத்தான்குளம் நெடுஞ்சாலைத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த சாலையில் பெரிய விபத்து நிகழும் முன்பு அதிகாரிகள் பார்வையிட்டு சாலையோரம் ஏற்பட்டுள்ள அரிப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rainwater erosion ,road ,sathankulam Sathankulam ,erosion , SATANGULAM, Wisdom - Choosing Road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...