×

கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திற பயணி ஒருவரிடம் பணத்தை பெற்று அதற்கான டிக்கெட்டை அவருக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிக் கொடுத்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு 5 பஸ் நிலையங்களில் இருந்து ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகள் 4,950 என சென்னையிலிருந்து 16,075 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், பிற ஊர்களிலிருந்து 9,995 சிறப்பு பேருந்துகளும்  இயக்கப்படவுள்ளன.  இதற்காக 15 முன்பதிவு சிறப்பு மையங்கள் நாளை முதல் 14ம் தேதி வரை செயல்படும். இதில் தாம்பரம் சானிட்டோரியம் மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் செயல்படும் சிறப்பு முன்பதிவு மையங்களில் நாளை முதல் முன்பதிவு நடக்கிறது. இதேபோல் பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் பொங்கல்  பண்டிகை முடிந்து பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 9,370 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவித்திட ஏதுவாக, 9445014450, 9445014436 என்ற தொலைபேசி எண்களை (24X7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் முன்பதிவு செய்து  கொள்ள, நடை முறையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக இணையதள வசதியான  www.tnstc.in உடன் www.redbus.in, www.paytm.com, www.busindia.com,  www.mackemytrip.com மற்றும் www.goibibo.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும்  முன்பதிவு செய்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


Tags : Vijaya Bhaskar ,Pongal Special Bus Booking Center ,Coimbatore Tamil Nadu ,Minister Vijayabaskar ,Pongal Festival ,Reservation Centers , Tamil Nadu, Pongal Festival, Special Bus, Reservation Centers, Minister Vijayabaskar
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய...