அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து, மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும், கைவிடக்கோரியும் நேற்று காலை  தாம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தபால் நிலையத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியது. இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தினை அனைத்து ஊழியர்களுக்கும் திரும்ப வழங்கிட வேண்டும். கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கிட உறுதி செய்திட வேண்டும். கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு இருக்கும் 5 சதவீதம் உச்சவரம்பை நீக்க வேண்டும், அரசு ஊழியரை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் பணி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


Tags : Postal employees,protest
× RELATED அரசு பஸ்களை முறையாக பராமரித்து இயக்க...