×

விளையாட்டு துளிகள்

*  மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எச்.எஸ்.பிரணாய் 2வது சுற்றுக்கு முன்னேறிய நிலையில், சாய் பிரனீத், கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
* ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவாவுக்கு ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் களமிறங்க ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* நியூசிலாந்தில் நடைபெறும் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) - கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) இணை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் கரோலின் டோலைடு (அமெரிக்கா) - ஜோகன்னா லார்சன் (ஸ்வீடன்) ஜோடியை எளிதாக வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.


Tags : Malaysia Masters Badminton , Malaysia Masters Badminton
× RELATED இணையதள விளையாட்டோடு ஆன்லைன் வகுப்பு...